28.6 C
கோட்டக்குப்பம்
May 21, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பரவலாக மழை பெய்து வருகிறது. கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த ஒரு வாரமாகவே விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் கனமழை முதல் மிக கன மழை பொலிந்து வருகிறது. 

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதாக வந்த தகவல்கள் அடிப்படையில் பேரூராட்சி ஊழியர்கள் ராட்சத டீசல் பம்ப் செட் மூலமும், ஜேசிபி இயந்திரங்கள் மூலமும், அங்கங்கே தேங்கியுள்ள மழை நீர் அகற்றும் பணி கோட்டகுப்பம் பேரூராட்சி சார்பாக துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழகத்திற்கான மழை முன்னறிவிப்பு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது:-

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கரையை நெருங்கக் கூடும். இதன் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து கோட்டகுப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

வெளிநாடுகளில் வசிக்கும் நமது கோட்டகுப்பம் நண்பா்கள் ஈத் பெருநாள் தொழுகை காட்சிகள்

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநாடு

Leave a Comment