30.6 C
கோட்டக்குப்பம்
May 20, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சியில் 8, 9, 10, 12 மற்றும் 15-வது வார்டுகளில் முஸ்லிம் லீக் போட்டி. விழுப்புரம் கிழக்கு மாவட்ட உறுப்பினர் கூட்டத்தில் முடிவு.

கோட்டக்குப்பம் நகராட்சியில் 8, 9, 10, 12 மற்றும் 15-வது உள்ளிட்ட ஐந்து வார்டுகளில் முஸ்லிம் லீக் போட்டி. விழுப்புரம் கிழக்கு மாவட்ட உறுப்பினர் கூட்டத்தில் முடிவு.

விழுப்புரம் மாவட்ட (கிழக்கு) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் கூட்டம் 31-10-2021 இன்று கோட்டக்குப்பம் இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் குழு வளாகத்தில் மாவட்ட தலைவர் விஆர் முஹமது இப்ராஹிம் முன்னிலையில் மண்டல பொறுப்பாளர் மௌலவி அப்துல் ரஹ்மான் ரப்பானி தலைமையில் நடைபெற்றது.

இந்தப் மாவட்ட உறுப்பினர் கூட்டத்தில், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டி இடுதல் போன்ற முக்கிய செய்திகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கோட்டக்குப்பம், செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம், ஆகிய பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தல் போட்டி இடுதல் போன்ற விஷயங்கள் குறித்து விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர் அமீர் பாஷா, விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைவர் பிலால் முஹம்மது, கோட்டக்குப்பம் நகர துணை செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், விழுப்புரம் மாவட்ட தலைவர் வி.ஆர்.முஹம்மது இபுராஹிம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

செஞ்சி பேரூராட்சியில் ஐந்து வார்டுகளில் போட்டியிடுவது என்றும், திண்டிவனம் நகராட்சியில் ஐந்து வார்டுகளில் போட்டியிடுவது, என்றும் விழுப்புரம் நகராட்சியில் 3 வார்டுகளில் போட்டியிடுவது என்றும் அந்தந்த பொறுப்பாளர்கள் தங்களின் நிலைப்பாட்டை தெரிவித்தனர்.

அதேபோன்று கோட்டக்குப்பம் நகராட்சியில் முஸ்லிம் லீக் 8, 9, 10, 12 மற்றும் 15-வது உள்ளிட்ட 5 வார்டுகளில் போட்டியிடுவது என்றும், அதற்கான வேட்பாளர்களையும் அடையாளம் காணப்பட்டு அதை மாநில தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) தற்போதைய கட்சி நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க அனைத்து ஊர்களிலும் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது

2) கட்சி பிரைமரி இல்லாத இடங்களில் புதிய பிரைமரிகளை அமைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

3) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் ஆகிய பேரூராட்சி நகராட்சிகளில் வெற்றி வாய்ப்புள்ள அதிக இடங்களில் போட்டியிடுதல் என்றும் கோட்டக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவியை முஸ்லிம் லீகிற்கு ஒதுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

4) திரிபுராவில் நடைபெறும் கண்மூடித்தனமான தாக்குதலை நிறுத்தி சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டுமென்றும், கொடூர தாக்குதலை நடத்தி வரும் திரிபுரா பாஜக அரசை கண்டித்தும் இந்த கலவரத்தை உடனடியாக இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

5) அனைத்து தரப்பு மக்களின் துயரங்களை சிறிதேனும் கருத்தில் கொள்ளாமல், தினம் தினம் பெட்ரோல், டீசல், கேஸ் விலை விலையை உயர்த்தி மக்களை பெரும் கஷ்டத்தில் ஆட்படுத்தும் ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

6) அனைத்து பகுதிகளிலும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

7) மேலும் கோட்டக்குப்பம் நகராட்சியில் 8, 9, 10, 12, 15 ஆகிய 5 வார்டுகளில் முஸ்லிம் லீக் சார்பாக போட்டியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மண்டல பொறுப்பாளர் மௌலவி அப்துல் ரஹ்மான் ரப்பானி அவர்களும், மாவட்ட தலைவர் வி.ஆர். முகமது இப்ராஹிம், அவர்களும் மாவட்ட துணை செயலாளர்கள் விழுப்புரம் சுல்தான் மொய்தீன், கோட்டக்குப்பம் அமீர் பாஷா அவர்களும், விழுப்புரம் மாவட்ட துணை தலைவர் செஞ்சி ஷபியுல்லா மாவட்ட பொருளாளர் அப்துல் கனி, விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிலால் முகமது, விழுப்புரம் நகர தலைவர் கபார், திண்டிவனம் நகர தலைவர் வழக்கறிஞர் கபீர், செயலாளர் சபி, கோட்டக்குப்பம் நகர தலைவர் இஹ்சானுல்லா,செயலாளர் முஹம்மது பாரூக், பொருளாளர் கமல் முஸ்தபா, துணை செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சுலைமான், நகர இளைஞரணி தலைவர் அமீன், செயலாளர் தீன், கோட்டக்குப்பம் நகர இளைஞரணி அமைப்பாளர் அப்துல் கரீம், மாவட்ட எம் எஸ் எஸ் பொறுப்பாளர்கள் முகம்மது அலி, முஹம்மது உசேன், நகர தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் முகமது யாசின், இனாயத்துல்லாஹ், ரஹ்மத் நகர் பொறுப்பாளர் செய்யது, நகர எம் எஸ் எஸ் பொறுப்பாளர்கள் ஹாஜாத் அலி, சேட், கோட்டக்குப்பம் நகர இளைஞரணி செயல்வீரர் அப்பாஸ், திண்டிவனம் நகர முக்கிய பொறுப்பாளர்கள், செஞ்சி நகர முக்கிய பொறுப்பாளர்கள், விழுப்புரம் நகர முக்கிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

முன்னதாக நிகழ்ச்சியில் தாய் சபையின் செயல்பாடுகள் குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதின் அவசியத்தை குறித்தும், நகரமன்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதின் வழிமுறை குறித்து மண்டல பொறுப்பாளர் அப்துர் ரஹ்மான் ரப்பானி அவர்கள் விளக்கிக் கூறினார்கள்.

அனைத்து பொறுப்பாளர்களுக்கும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் உறுப்பினர் விண்ணப்பப் படிவம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டைகள் மண்டல பொறுப்பாளர் முன்னிலையில் மாவட்டத் தலைவர் வழங்கினார்கள்.

இறுதியில் விழுப்புரம் சுல்தான் மொய்தீன் நன்றி தெரிவித்தார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் உலக இரத்ததான கொடையாளர்கள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

Leave a Comment