29.6 C
கோட்டக்குப்பம்
March 21, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் கோரித்தோப்பில் சுதந்திர தின விழா மற்றும் கண்காணிப்பு கேமரா திறப்பு நிகழ்ச்சி

நேற்று 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் கோரித்தோப்பு பகுதியில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவிற்கு கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

மேலும், மாலை 6 மணி அளவில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், கண்காணிப்பு கேமரா முக்கியத்துவத்தைப் பற்றியும், அதன் அவசியத்தை பற்றியும் காவல் ஆய்வாளர் திரு, சரவணன் அவர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில், பரகத் நகர் இணை முத்தவல்லி பிலால் முஹம்மது, மணிச்சுடர் நிருபர் அமீர் பாஷா, திமுக பிரமுகர் A.R. சாதிக், கோட்டகுப்பம் குவைத் ஜமாத் துணைத் தலைவர் ரஹ்மத்துல்லாஹ், மிஸ்வாக் துணைத்தலைவர் சேட்டு, மிஸ்வாக் செயற்குழு உறுப்பினர் ஹுசைன் மற்றும் கோரி தோப்பு மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவினை ஹாஜாத் அலி மற்றும் அப்துல் அக்கீம் அவர்கள் முன்னிலையில் கோரி தோப்பு மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சி, கோரியை நினைவுபடுத்தும் விதமாக, இவ்விழா நடத்தப்பட்டதாக கோரித்தோப்பு இளைஞர்கள் தெரிவித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிவாரண உதவி.

டைம்ஸ் குழு

ஜாமிஆ மஸ்ஜித் ஹாபிழ் மௌலவி S.A. புகாரி மௌலானா அன்வாரி அவர்களின் பெருநாள் வாழ்த்து..

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல்-மதரஸா நிர்வாகத்தின் சார்பாக சுதந்திர தின நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

Leave a Comment