20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் நோக்கில் புதிய ஒரு ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டு அதை 11-08-21 புதன்கிழமை அன்று மாலை 05:30 மணி அளவில் காயிதே மில்லத் ஆர்ச் அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் சகோதரர் இலியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார், ஆரோக்கியம் ஒரு அருட்கொடை என்ற தலைப்பில் சகோதரர் இஸ்மாயில் MISc உரை நிகழ்த்தினார், இஸ்லாம் என்றால் பிறர் நலம் நாடுதல் என்ற தலைப்பில் மாவட்ட தலைவர் சகோதரர் இப்ராஹிம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் மற்றும் TNTJ வின் அரும்பணிகள் என்ற தலைப்பில் மாநில செயலாளர் சகோதரர் ஆவடி இப்ராஹிம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

இறுதியில் கொரோனா பெருந்தொற்று காலங்களில் அவசர இரத்த தானம் வழங்கிய இரத்தக் கொடை யாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

அபுதாபி வாழ் கோட்டக்குப்பத்தினர் பெருநாள் கொண்டாட்டம்!! (படங்கள்)

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பகுதி அங்கன்வாடிகளில் வாழை கன்றுகள் நடப்பட்டது.

டைம்ஸ் குழு

போதை பொருள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

டைம்ஸ் குழு

Leave a Comment