27.7 C
கோட்டக்குப்பம்
September 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக குடியரசு தின கொண்டாட்டம்…

கோட்டகுப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக இன்று 72 வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

முதல் நிகழ்வாக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்க அலுவலகமான எம்எஸ் மரக்கடை வளாகத்தில் கொடியேற்ற நிகழ்ச்சியில் கோட்டகுப்பம் செயல் அலுவலர் திரு ராமலிங்கம், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் அப்துல் ஹமீது மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய துணை ஆய்வாளர் திருமதி பத்மா முன்னிலையில் காவல் ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார்கள்.

சங்க தலைவர் முபாரக் அவர்கள் தலைமை தாங்க,
கவுரவத் தலைவர் கௌரவத் சாகுல் ஹமீது, துணைத்தலைவர் பூபாலன், அமைப்பாளர் ரபி ஆகியோர் விருந்தினரை கௌரவிக்க
செயலாளர் அப்துல் ரவூப் வரவேற்புரை வழங்க, செய்தியாளர் அமீர் பாஷா வாழ்த்துரை வழங்க துணை செயலாளர் பிலால் முஹம்மது நன்றியுரை வழங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் வியாபாரப் பெருமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

தக்பீர் முழக்கத்துடன் களைகட்டிய ஈகைத் திருநாள்: கோட்டக்குப்பத்தில் ஆரத்தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட சகோதரர்கள்! 

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம். பகுதி – 1

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் த.மு.மு.க. நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம்.

டைம்ஸ் குழு

Leave a Comment