29.4 C
கோட்டக்குப்பம்
May 19, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை

கடந்த 15 நாட்களாக ஆரோவில் மற்றும் வானூர் காவல் நிலைய எல்லையில் வீட்டில் ஆள் இருக்கும்பொழுதே, பின்னால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து கொள்ளையடிக்கும் கூட்டம் சுற்றித்திரிந்து வருகிறது. தன்னந்தனியாக இருக்கும் வீடுகளில் இது நடந்தேறி வருகிறது.

ஆகவே பர்கத் நகர், ஜமியத் நகர், திவான் கந்தப்பா நகர் பகுதியில் கோட்டக்குப்பம் காவல் நிலைய எல்லையில் வாழும் மக்கள் அனைவரும் உஷாராக இருக்கும்படியும், கதவுகளை சரியான முறையில் பூட்டி வைத்துக் கொள்ளும் படியும், காவல் துறையின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. தேவையற்ற நபர்கள் யாராவது வந்து கதவைத் திறக்கச் சொன்னால் திறக்க வேண்டாம். மிக மிக ஜாக்கிரதையாக இருக்கவும். குறிப்பாக பின்பக்க கதவை இறுக்கி பூட்டி வைக்கவும்.

இவர்கள் திருச்சி அல்லது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த குறவர் கிரிமினல்களாக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கக்கூடிய காரணத்தினால் சந்தேகப்படும்படி எவராவது உங்கள் பகுதியில் சுற்றித் திரிந்தால் தகவல் கொடுக்கவும். பொதுவாக இவர்கள் நான்கு அல்லது ஐந்து நபர்கள் வீதம் கூட்டமாக வந்து கொள்ளை அடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டகுப்பத்தில் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

பரகத் நகரின் பிரதான பகுதியில் மின் விளக்கு அமைத்து மக்களின் பல வருட கோரிக்கையை நிறைவேற்றிய கவுன்சிலர்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஈ.சி.ஆரில் பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் மீது கார் மோதியதில் உயிரிழப்பு..!

டைம்ஸ் குழு

Leave a Comment