29.6 C
கோட்டக்குப்பம்
March 21, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் வணிகர் சங்கத்தின் சார்பாக இன்று தொழில் உரிமம் முகாம் நடைபெற்றது.

கோட்டக்குப்பம் வணிகர் சங்கத்தின் சார்பாக இன்று தொழில் உரிமம் பெறுதல் தொழில் உரிமம் புதுப்பித்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றத்தின் சார்பாக பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொழில் நடத்தும், வியாபாரம் செய்யும் அனைவருக்கும் தொழில் உரிமை மற்றும் தொழில் வரி பெறவேண்டும் என்று அறிவிப்புச் செய்யப்பட்டு இருந்த்து.

வியாபாரிகள் தங்களின் வியாபாரங்களை விட்டுவிட்டு சிரமப்படுவதை தவிர்க்க அவர்களுக்காக சிறப்பு முகாம் இன்று புஸ்தானியா பள்ளிவாசல் அருகில் கோட்டகுப்பம் வணிகர் சங்க அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

அதில் காந்தி ரோட்டில் உள்ள வணிகம் செய்யும் பெரும்பாலான வணிகர்கள் தங்கள் உரிமங்களை புதுப்பித்தும் புதிய உரிமங்களைப் பெற்றும் பதிவு செய்து வந்தார்கள்.

பேரூராட்சி மன்ற ஊழியர்கள் மூலம் இந்த பணிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை கோட்டகுப்பம் வணிகர் சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து. நிகழ்ச்சியில் தலைவர் முபாரக், செயலாளர் ரவுப், துணைச் செயலாளர் பிலால், துணைத் தலைவர் பூபலன் பொருளாளர் பழனி மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்கள் வணிக நிறுவனங்களின் உரிமங்களை பதிந்து சென்றனர்.

வணிகர் சங்கம் ஏற்பாடு செய்த இந்த முகாம் அனைவருக்கும் பெரும் உதவியாக இருந்தது என்று அனைவரும் பாராட்டினார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஷாதி மஹாலில் தொடங்கியது மாபெரும் இஸ்லாமிய கண்காட்சி: கவனத்தை ஈர்க்கும் மாணவிகளின் ஆக்கங்கள்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் காவல் உள்கோட்டத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு 4 நாள்களில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 600-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் பூட்டப்பட்டிருக்கும் வணிக வளாகத்தை திறக்கக்கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டம்!

டைம்ஸ் குழு

Leave a Comment