27.1 C
கோட்டக்குப்பம்
March 22, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பில் 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 400 பயனாளிகளுக்கு வினியோகம்.

ஏழை எளியவரும் சிறப்பான முறையில் பெருநாளை கொண்டாடும் நோக்கத்தில் வருடா வருடம் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பில் வழங்கப்படுவது வழக்கம்.

அதேபோல், இந்த வருடமும் கோட்டக்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மிஸ்வாக் சார்பாக 15 மளிகை பொருட்கள் – பாஸ்மதி, பொன்னி அரிசி, சர்க்கரை, எண்ணெய், கோதுமை, மைதா, ரவை, சேமியா, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, முந்திரி, திராட்சை, பிரியாணி மசாலா, பூண்டு, நெய், பிஸ்கட் பாக்கெட், துணி சோப்பு உள்ளடக்கிய தொகுப்பு பை 400 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

வருமானம் இன்றி தவிக்கும் ஏழைகளும் பெருநாள் அன்று சிறப்பாக கொண்டாட திருநாளில் சமைக்கத் தேவையான மளிகை பொருட்கள் சுமார் 600 ரூபாய் மதிப்பில் வழங்குவது என்று முடிவு செய்து அதன்படி பல நண்பர்கள் மற்றும் மிஸ்வாக் குழுவினர் வழங்கிய நன்கொடைகளைக் கொண்டும் 400 ஏழைகளுக்கு இந்த மளிகை தொகுப்பு பை வழங்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஜமியத்துல் அன்வார் தீனியாத் மக்தப் மதரஸா 3-ஆம் ஆண்டு விழா

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் சீரான மின் வினியோகம் கோரி மின்வாரியத்துக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை மனு!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பெரிய முதலியார் சாவடியில் முதல் துளிர் சொசைட்டி தொடங்கப்பட்டது.

டைம்ஸ் குழு

Leave a Comment