27.7 C
கோட்டக்குப்பம்
September 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி

இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சிகள் கோட்டக்குப்பத்தில் பரவலாக நடைபெற்றது.

அதன்படி கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக கோட்டக்குப்பம் காந்தி ரோட்டில் உள்ள வணிகர் சங்கம் அலுவலகத்தில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் அப்துல் ஹமீத் திமுக மாவட்ட வர்த்தக அணி பொறுப்பாளர் ஜெயமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சங்கத்தலைவர் முபாரக் அவர்களும் சங்க செயலாளர் அப்துல் ரவுப் அவர்களும் சங்கங் துணை செயலாளர் பிலால் முஹம்மது அவர்களும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் எம்ஜி ரோடு வியாபாரிகள் சங்கத் தலைவர் நஜீர் அவர்களும், சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் அமீர் பாஷா, சங்க அமைப்பாளர் முகமது ரஃபி, துணைத் தலைவர் சாகுல் ஹமீது, பூபாலன் பொருளாளர் வேல் மற்றும் சங்க உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

வெளிநாடுகளில் வசிக்கும் நமது கோட்டகுப்பம் நண்பா்கள் ஈத் பெருநாள் தொழுகை காட்சிகள்

கோட்டக்குப்பம் பழைய பட்டினப்பாதையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி….

பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழவேண்டும் என ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு..

Leave a Comment