January 15, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் த.மு.மு.க. சார்பில் சுதந்திர தின விழா.

இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா, கோட்டக்குப்பம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (த.மு.மு.க) சார்பில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு, கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) MTS ஆட்டோ நிறுத்தம் மற்றும் ரவுண்டானா பகுதிகளில் நடைபெற்றது.​

விழுப்புரம் தெற்கு மாவட்ட த.மு.மு.க. நகர தலைவர் அபுதாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ECR MTS ஆட்டோ நிறுத்தத்தில், 22வது வார்டு நகரமன்ற உறுப்பினர் இ. நாசர் அலி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

ரவுண்டானா பகுதியில் விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் க. அஸ்கர் அலி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மை குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.​

இந்நிகழ்வில், மாவட்ட துணைச் செயலாளர் ஷபி பாஷா, முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் அஷ்ரப் அலி, முன்னாள் முத்தவல்லி யாசானுல்லா, நகர நிர்வாகிகள் ஏ.கே.பி. பஷீர் அஹமது, இக்பால் பாஷா, அப்துல் ஜப்பார், முஹம்மது யூசுப், சிராஜுதீன், ஆஸ் என்ற ஆபிதீன், ஆட்டோ அமீன் கிளைத் தலைவர் நிஜாமுதீன், மைதீன், அபுல் ஹசன் கிளைச் செயலாளர், ஜமியத் நகர் பொறுப்பாளர்கள் ஜாகீர் உசேன், அஸ்கர் அலி உட்பட த.மு.மு.க-வின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.​

நிகழ்ச்சியின் நிறைவில், பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

வக்ஃபு போர்டு வசம் இருந்த கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மீண்டும் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைப்பு.

கோட்டக்குப்பத்தில் மின்வாரியத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

கொரானா நிவாரணமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

Leave a Comment