இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா, கோட்டக்குப்பம் மின்சார வாரிய அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கோட்டக்குப்பம் மின்சார வாரிய இளநிலை பொறியாளர் திரு. ஆதிமூலம் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திர தின விழாவில் மின்வாரியத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.




