இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டில் உள்ள மாமூலப்பை தெரு சந்திப்பில் இன்று தேசியக்கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், 17-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ரஹ்மத்துல்லா அவர்கள் மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிறகு சிறப்புரையாற்றினார். அப்போது, அவர் தனது வார்டில் வாக்களித்தபடி நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளைப் பற்றியும், எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
இந்த விழாவில் ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடினர்.








