20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஈகைத் திருநாள்.  [புகைப்படங்கள்]

கோட்டக்குப்பம் பகுதியில் நோன்பு பெருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் தொழுகை இன்று(31/03/2025) காலை 7:30 மணிக்கு ஈத்காவில் நடைபெற்றது.

தொழுகைக்காக ஜமாத்தார்கள் அனைவரும் காலை 6:45 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அருகில் ஒன்று கூடி, தக்பீர் முழக்கத்துடன் ஈத்கா மைதானத்தை நோக்கி சென்றனர்.

ஈத்கா மைதானத்தில் மௌலவி ஹாபிழ் S.A. முஹம்மது புஹாரி அன்வாரி அவர்கள், “இளைஞர்களின் நல்வழிப்படுத்துதல்” பற்றி சிறப்பு பயான் நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து, நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகைக்குப் பின்னர், உலக அமைதிக்காகவும், அனைவரின் நல்வாழ்வுக்காகவும், சமுதாய ஒற்றுமைக்காகவும் சிறப்பு துஆ (பிரார்த்தனை) செய்யப்பட்டது.

தொழுகை நிறைவடைந்ததும், ஜமாத்தார்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி, தங்களின் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

ஹஜ் பெருநாள் தொழுகைகாக ஈத்கா மைதானம் நோக்கி நமதூர் ஜமாத்தார்கள்..

குவைத் வாழ் கோட்டக்குப்பத்தினர் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! (படங்கள்).

டைம்ஸ் குழு

தமிழ்நாடு மின்சார துறை அமைச்சரை சந்தித்த கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள்: துணை மின் நிலையம் உடனடியாக அமைத்து தொடர் மின்வெட்டை சரி செய்ய கோரிக்கை.

டைம்ஸ் குழு

Leave a Comment