28.7 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் நவீன தானியங்கி தெரு விளக்குகள் அமைப்பு.

கோட்டக்குப்பம் நகராட்சி பகுதியில் நவீன தானியங்கி தெரு விளக்குகள் அமைக்கப்படுகிறது. மின்சார ஏற்ற இறக்கங்களை தானாகவே சரி செய்துகொள்ளும் வசதியும், விளக்குகளில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் பொறியாளருக்கு தானாக எச்சரிக்கை அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஊழியர்கள் மூலம் விளக்குகளை ஆன், ஆஃப் செய்யும் வேலைகள் இனிமேல் இருக்காது. குறிப்பாக, இந்த தெருவிளக்கு நேரக் கட்டுப்பாடுகளின்படி உருவாக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு எரியத் தொடங்கும் இந்த விளக்குகள், காலை 6 மணிக்கு தானாகவே ஆஃப் ஆகிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், நவீன தானியங்கி தெரு விளக்குகள் முதல் கட்டமாக கோட்டக்குப்பம் எம். ஜி ரோடு, இந்தியன் பேங்க் எதிரில் அமைந்துள்ள மின்கம்பத்தில் இன்று பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. இத்திட்டம், விரைவில் எம். ஜி ரோடு பகுதி முழுவதும் அமைக்கப்படவுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் பூட்டப்பட்டிருக்கும் வணிக வளாகத்தை திறக்கக்கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டம்!

டைம்ஸ் குழு

இன்ஸ்பெக்டரிடம் தி.மு.க. கவுன்சிலர்கள் புகார்

டைம்ஸ் குழு

Leave a Comment