20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து வரும் 25-ஆம் தேதி முழு கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோட்டக்குப்பம் மக்கள் நல கூட்டமைப்பு சார்பாக இன்று 11/10/2023 புதன் மாலை 4 மணிக்கு, கோட்டக்குப்பத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக மின்வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஜனநாயக போராட்டத்தை நடத்துவதற்காக தனியார் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி, இயக்கம், பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகம், கோவில் நிர்வாகம், மீனவ பஞ்சாயத்து, வியாபாரிகள் சங்கம், தொழிற்சங்கம் மற்றும் ஊர்பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.

அதன் அடிப்படையில் 25/10/2023 புதன்கிழமை ஒரு நாள் கடை அடைப்பு மற்றும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 75-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் கிவ்ஸ் சார்பில் ரமலான் நோன்பு அன்பளிப்பு வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் பொது பாதையை மறித்து காவல் நிலையம் சுவர் அமைக்கப்பட இருப்பதை கண்டித்து பொதுமக்கள் எதிர்ப்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment