26.1 C
கோட்டக்குப்பம்
March 22, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் மாணவரணி சார்பாக 19-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி மோர்சார் தெரு தவ்ஹீத் மர்கஸில் காலை 10 மணி முதல் மதியம் 01-30 மணி வரை நடைபெற்றது.

இதில் பயனுள்ள கல்வி என்ற தலைப்பில் சகோதரர் இஸ்மாயில் MIsc.அவர்கள் உரையாற்றினார்கள், என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்? என்ற தலைப்பில் சகோதரர் ரியாஸ் அவர்கள் உரையாற்றினார்கள், முஸ்லிம் சமுதாயத்திற்கு பயன் தரும் துறைகள் மற்றும் அரசு வேலை பெறக்கூடிய வழிமுறை என்ன? என்ற தலைப்பில் சகோதரர் அஷ்ரப் அலி அவர்கள் உரை நிகழ்த்தினர்.

இதில் 100-க்கு அதிகமான மாணவ/மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். இறுதியாக மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு பதில் வழங்கப்பட்டது. அதிகமானோர் இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்தது, தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டகுப்பம் மற்றும் புதுச்சேரி எல்லையில் பதற்றம்.

மின் மோட்டார் பொருத்தி குடி தண்ணீர் எடுத்தால் நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் நாளை(28-11-2021) 12-வது மெகா தடுப்பூசி முகாம்!

டைம்ஸ் குழு

Leave a Comment