20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
செய்திகள் பிற செய்திகள்

3 மாதங்கள் ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களின் குடும்ப அட்டைகள் ரத்து!

மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடு மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்வான், மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருள்களை வாங்காத குடும்ப அட்டைதாரர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதன் மூலம், மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களை வாங்க வேண்டிய அவசியமில்லாதவர்களைக் கண்டறிந்து அவர்களது குடும்ப அட்டைகளை ரத்து செய்ய முடியும் என்றும் பாஸ்வான் குறிப்பிட்டார்.

ரேஷன் கடைகளுக்கு வர இயலாதவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மானிய விலையில் உணவு தானியங்களை விநியோகிக்க வேண்டும் என மாநில அரசுகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பாஸ்வான் மேலும் தெரிவித்தார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

ஜெயஶ்ரீயின் பெற்றோருக்கு விசிக நிதி உதவி

கோட்டக்குப்பம் பகுதிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை அச்சுறுத்தும் மாடுகள்.

மின் கம்பங்களில் உள்ள கேபிள் டிவி ஒயர் விளம்பர பலகை அகற்ற மின்வாரியம் உத்தரவு

டைம்ஸ் குழு

Leave a Comment