கோட்டக்குப்பம் பகுதியில் நேற்று (14/09/25) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக மாபெரும் ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேயர் முத்துப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்ய முன்வந்தனர். இதில் 30 நபர்களிடமிருந்து வெற்றிகரமாக ரத்தம் சேகரிக்கப்பட்டது.
ரத்தம் தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், பணியாற்றிய மருத்துவக் குழுவினருக்கு நூல்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.












