கோட்டக்குப்பம் நகராட்சியின் வார்டு-20, அணைக்குடியார் தெரு முன்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வரும் குடிநீர் பற்றாக்குறை பிரச்சினை மற்றும் சாலையோர சைடு வாய்க்கால் வசதி அமைக்க வேண்டும் என்பதற்காக இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
குடிநீர் வழங்கலில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், சைடு வாய்க்கால் அமைக்கப்படாததால் அசௌகரியங்களுக்கு உள்ளாகவருகின்றனர் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த கோரிக்கைகள், இதற்குமுன் கடந்த ஆண்டில் நகர்மன்ற தலைவர் எஸ். எஸ். ஜெயமூர்த்தி மற்றும் 20-ஆம் வார்டு கவுன்சிலர் S. சம்சாத் பேகம் சாதிக் பாஷா அவர்களுக்கு மனுவாக முன்வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. (மூலம்: Kottakuppam Times, 2024)
பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், இந்த முறை மாநில அரசின் சிறப்பு முகாம் வழியாகவே நிரந்தரத் தீர்வு கிடைக்குமா? என்பது குறித்து மக்கள் ஆழ்ந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.


