January 15, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.​

இந்நிகழ்வில், சங்கத் தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச் செயலாளருமான A. அன்சர் பாஷா தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

விழாவின் வரவேற்புரையை சங்கத்தின் பொருளாளர் G. கமால் ஹசன் வழங்க, நிகழ்ச்சியைச் செயலாளர் M. ஷாகுல் ஹமீது தொகுத்து வழங்கினார்.​

இந்நிகழ்வில் சங்கத்தின் உயர் மட்டக் குழு நிர்வாகிகள், துணைத் தலைவர்கள், தலைமைக் குழு நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

விழாவின் நிறைவில், துணைத் தலைவர் A. முகமது இலியாஸ் நன்றி கூறினார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் 18-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேர ரோந்துப்பணி தொடர்பாக காவல் ஆய்வாளர் அவர்களிடம் கவுன்சிலர் மனு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குவைத்தில் கோட்டகுப்பத்தினர் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்..

டைம்ஸ் குழு

Leave a Comment