May 11, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் முதலமைச்சர் காணொலி மூலம் திறப்பு.

கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றம் எதிரில் அமைந்திருந்த கோட்டக்குப்பம் காவல் நிலையம் பழுதானத்தை அடுத்து, அதனை அகற்றி விட்டு ரூபாய் 1 கோடியே 2 லட்சம் செலவில் அதே இடத்தில் புதிய காவல் நிலையம் அதிநவீன வசதிகளுடன் கட்டுமானம் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

தற்பொழுது கட்டுமானப் பணிகள் முழுவதும் முடிந்து தயார் நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

இதனை உறுதிப்படுத்தி, விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா அவர்கள் புதிய காவல் நிலையத்திற்கு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சி கோட்டக்குப்பம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அருண், கோட்டக்குப்பம் ஆய்வாளர் திரு.சரவணன் மற்றும் காவல்துறையினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், வணிகர் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பில் ஃபித்ரா வசூல் தொகை வினியோகம்.

டைம்ஸ் குழு

தொடர் மின்வெட்டு எதிரொலி: கோட்டக்குப்பம் மின்வாரியம் எதிரில் தொலைக்காட்சி பெட்டிக்கு மாலை அணிவித்து முற்றுகை போராட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக பானை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment