பரக்கத் நகர் பகுதியில் குடிநீர் விநியோகம் சரியாக இல்லாததை சுட்டிக் காட்டி, பல கட்டங்களாக பேரூராட்சி நிர்வாகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அதன் பலனாக அனைத்து பகுதிகளுக்கும் புதிய குடிநீர் குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளது.
குடிநீர் குழாய்கள் புதைக்கப்பட்ட அனைத்து சாலைகளும் தற்போது குண்டும் குழியுமாக உள்ளது.
ரோடுகளை சரி செய்ய வலியுறுத்தியும், அனைத்து குடிநீர் இணைப்புகளையும் மறு குடிநீர் இணைப்பு கொடுக்க வலியுறுத்தியும் அனைத்து தெருக்களிலும் சாலை வசதி மற்றும் தெரு விளக்கு வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று மறுபடியும் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் அனைத்து அமைப்பு சார்பாக இன்று (2-11-2020) மனு கொடுக்கப்பட்டது.
மனு கொடுத்ததன் விளைவாக, இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்ற அனைவருக்கும் புதிய குழாயில் மறு இணைப்பு வழங்க வேண்டும். அதற்காக பேரூராட்சி மன்றம் சொன்ன தொகையை ஜமாத்தார்கள் அனைத்து அமைப்பினரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இறுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பேரூராட்சி மன்ற அலுவலக கட்டணமாக 700 ரூபாய் செலுத்துவது என்றும்,
குடிநீர் இணைப்பு கொடுக்க வரும் ஊழியர் கூலி மற்றும் அதற்கான பொருட்கள் உட்பட 1300 ரூபாய் ஆக மொத்தம் 2 ஆயிரம் ரூபாய் ஒரு இணைப்புக்கு மறு இணைப்பு கட்டணமாக செலுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
நமது பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மறு இணைப்பு பெற 700 மற்றும் 1300 ரூபாய் மொத்தம் 2000 ரூபாய் செலுத்தி மறு இணைப்பு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அனைத்து பகுதியிலும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்ட பிறகு தோண்டப்பட்ட அனைத்து ரோடுகளும் சரி செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளதால், நாம் காலம் தாழ்த்தாமல் மறு இணைப்பு கட்டணத்தை செலுத்தி நம் பகுதியில் ரோடுகளை சரி செய்ய ஒத்துழைப்போம்.