இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில், சங்கத் தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச் செயலாளருமான A. அன்சர் பாஷா தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
விழாவின் வரவேற்புரையை சங்கத்தின் பொருளாளர் G. கமால் ஹசன் வழங்க, நிகழ்ச்சியைச் செயலாளர் M. ஷாகுல் ஹமீது தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் சங்கத்தின் உயர் மட்டக் குழு நிர்வாகிகள், துணைத் தலைவர்கள், தலைமைக் குழு நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவின் நிறைவில், துணைத் தலைவர் A. முகமது இலியாஸ் நன்றி கூறினார்.














