28.7 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் மனிதநேய மக்கள் கட்சியின் 16-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றம் & நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி.

கோட்டக்குப்பதில் மனிதநேய மக்கள் கட்சியின் 16-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகர தலைவர் M. அப்தல ரஹீம் தலைமையில் இன்று(22/02/2024) காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

இதில், தமுமுக மாநிலச் செயலாளர் மு.யா.முஸ்தாக்தீன் அவர்கள் கோட்டக்குப்பம் நகராட்சி அருகில் மனித நேய மக்கள் கட்சியின் கொடியினை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார்.
தமுமுக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கா.அஸ்கர் அலி அவர்களும், இ.சி.ஆர். சாலையில் MTS ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நகர தலைவர் அப்துல் ரஹீம், பரகத் நகர் M.G.ரோடு சந்திப்பில் அமைப்பு குழு உறுப்பினர் A.K.பஷீர் அகமது ஆகியோர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, கோட்டக்குப்பம் அயூப் கர்டனில் அமைந்துள்ள அன்பு இல்லம் ஊனமுற்ற பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், MTS மாவட்ட துனை செயலாளர் முகமது அலி, கோட்டக்குப்பம் நகர நிர்வாகிகள் நூருல் அமீன், முஹம்மது யூசுப், அபுல் ஹசன், ஆஸ் (எ) ஆபிதீன், அஸ்லம் பாஷா SMI மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஜமியத் நகர் கிளை தமுமுக சார்பாக 150-க்கும் மேற்பட்ட எளிய குடும்பங்களுக்கு மழை நிவாரணம்…

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பர்கத் நகர் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. சில வீடுகளில் தண்ணீர் உள்ளே புகுந்தது.

டைம்ஸ் குழு

Leave a Comment