28.7 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அணைக்குடியார் தெரு பகுதியில் நேற்று காலை இடி விழுந்ததில் மின்சாதன பொருட்கள் சேதம்.

கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று காலை சுமார் 5:30 மணி அளவில், கோட்டக்குப்பம் அணைக்குடியார் தெரு, கடலோர பகுதியில் பயங்கர சத்தத்துடன் இடி விழுந்தது. இதனால் வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர்.

அணைக்குடியார் தெரு கடலோர பகுதியில் இருந்த வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்களான தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டிகள், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் மின் இணைப்புகள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்தன. அதிர்ஷ்டவசமாக இடி தாக்கிய வீட்டில் இருந்தவர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக விழுப்புரத்தில் நாளை மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்! கோட்டக்குப்பதிலிருந்து பேருந்து வசதி!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் த.மு.மு.க & ம.ம.க. சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக இன்று 72 ஆவது குடியரசு தின நிகழ்ச்சி..

Leave a Comment