இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா, கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.
பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில், அதன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மஹல்லாவாசிகள், ஜமாத்தார்கள், மதரஸா மாணவர்கள், உலமாக்கள், பெரியோர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.















