May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்திய பா.ஜ.க அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோட்டக்குப்பத்தில் இன்று(15/03/2024) கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் மதச்சார்பின்மையைச் சிதைக்கும், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும், இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக அரசைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி, கோட்டக்குப்பம் நகராட்சி எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை ரவிக்குமார் எம்.பி. அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கு 24 நபர்கள் போட்டியின்றி தேர்வு.

டைம்ஸ் குழு

கோட்டகுப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயர் மின் விளக்கு கம்பங்கள் அப்புறப்படுத்தப்படுகிறது

ஆஷுரா தின சிறப்பு சொற்பொழிவு மற்றும் நோன்பு நோற்க ஏற்பாடு..

Leave a Comment