கோட்டக்குப்பம் பகுதிகளில் தொடர் மின்வெட்டு பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில் அதனை கண்டித்து, அனைத்து அமைப்புகளும் உள்ளடக்கிய “கோட்டக்குப்பம் மக்கள்நல கூட்டமைப்பு” சார்பில் கோட்டக்குப்பம் நகராட்சி முழுவதும் தடையில்லா மின்சாரம் மற்றும் துணை மின் நிலையம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கடையடைப்பு மற்றும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம், நாளை 25-10-2023 புதன்கிழமை, கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் நடைபெறவுள்ளது.




