May 11, 2025
Kottakuppam Times
பிற செய்திகள்

ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!

சமையல் கேஸ் சிலிண்டரின் விலை தற்போது ரூ.25 உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே மாதத்தில் ரூ.100 அதிகரித்து தற்போது சிலிண்டரின் விலை ரூ.810ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், வெங்காயம் வரிசையில் கேஸ் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டரின் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதன் படி, மாதம் ஒரு முறை கேஸ் சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படும். ஆனால், இம்மாதம் மட்டும் 3வது முறையாக கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

பிப்ரவரி 4ஆம் தேதி 25 ரூபாயும், பிப்ரவரி 15ஆம் தேதி 50 ரூபாயும் உயர்த்தப்பட்ட நிலையில், சமையல் கேஸ் சிலிண்டர் விலை இன்று (பிப்.,25) மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது. 

பிப்ரவரியில் 3வது முறையாக ரூ.25 விலை உயர்வால் கேஸ் சிலிண்டர் விலை ரூ.785லிருந்து ரூ.810ஆக அதிகரித்துள்ளது. சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் இல்லத்தரிசிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை

தமிழகம் முழுவதும் சொத்து வரி 50 – 100 சதவீதம் உயர்வு

நவ. 16ல் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

டைம்ஸ் குழு

Leave a Comment