January 15, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

இஸ்ரேலின் இன அழிப்பை கண்டித்து: கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஸ்தம்பித்த நகராட்சி திடல்!

பாலஸ்தீனில் தொடர்ந்து நிகழும் இன அழிப்பு யுத்தத்தை நடத்தி வரும் இஸ்ரேல் மற்றும் அதற்கு துணை நிற்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டைக் கண்டித்தும், பாலஸ்தீனை உடனடியாகத் தனி நாடாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) அங்கீகரிக்க வலியுறுத்தியும், கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் இன்று (03/10/2025) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று மதியம் சரியாக 1:30 மணியளவில் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மௌலானா மௌலவி ஹாபிஸ் சித்திக் பாஷா அவர்கள் தலைமை தாங்கினார். அனைத்துப் பள்ளிவாசல்களின் முத்தவளிகள், அனைத்துக் கட்சி மற்றும் இயக்க நிர்வாகிகள், வியாபாரிகள் – வர்த்தக சங்க நிர்வாகிகள், ஆட்டோ மற்றும் மினிடோர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில், மௌலானா மௌலவி கலீலுர் ரஹ்மான் ரப்பானி மற்றும் மௌலானா மௌலவி ஹாபிஸ் ஆரிப் அலி ரப்பானி ஆகியோர் கண்டன உரைகளை ஆற்றினர். அபுதாகிர் மற்றும் அஷ்ரப் அலி ஆகியோர் கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊர் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு பாலஸ்தீனில் நடக்கும் போரைக் கண்டித்தும், ஐ.நா. சபை பாலஸ்தீனை அங்கீகரிக்க வலியுறுத்தியும் தங்களது கண்டனங்களைப் பலமாகப் பதிவு செய்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு

புதுச்சேரி நேரு வீதியை மிஞ்சும் கோட்டக்குப்பம் காந்தி ரோடு!

டைம்ஸ் குழு

கத்தார் வாழ் கோட்டகுப்பத்தினர் பெருநாள் கொண்டாட்டம்!! (படங்கள்)

டைம்ஸ் குழு

Leave a Comment