23.3 C
கோட்டக்குப்பம்
December 15, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் பசுமைப் புரட்சி: பி.எம். பவுண்டேஷன் சார்பில் 1000 விதைப்பந்துகள் வழங்கல்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், பசுமையை அதிகரிக்கும் நோக்கிலும், கோட்டக்குப்பத்தில் பி.எம். பவுண்டேஷன் சார்பில் பொதுமக்களுக்கு 1000 விதைப்பந்துகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோட்டக்குப்பம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள காயிதே மில்லத் நினைவு வளைவு அருகே, இன்று (ஜூலை 25, வெள்ளிக்கிழமை) மதியம் 1:30 மணியளவில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில், மாட்டுச் சாணம், செம்மண், களிமண் உள்ளிட்ட இயற்கை உரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட விதைப்பந்துகள் வழங்கப்பட்டன. இந்த பந்துகளில் அரசன், புளி, வேம்பு, வாகை, சுபாபுல் போன்ற மரங்களின் விதைகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த விதைப்பந்துகளைப் பெறும் பொதுமக்கள், அவற்றை ஏரி, குளம், குட்டை மற்றும் கண்மாய் போன்ற நீர்நிலைகளின் கரைகளில் வீசிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதன் மூலம், மழைக்காலங்களில் விதைகள் எளிதில் முளைத்து மரங்களாக வளரும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இது இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்த முக்கிய விழிப்புணர்வாக அமைந்தது.

இந்நிகழ்ச்சியில், பி.எம். பவுண்டேஷன் மேலாண்மைக் குழு அமைப்பாளர் பத்ருதீன், செயலாளர் கமருதீன், மக்கள் தொடர்பு அலுவலர் முகமது அலி, சட்ட ஆலோசகர்கள் அப்துல் சமது, பாலமுருகன் மற்றும் வசந்தம் சிட் முஹம்மது வசீம், பி.எம். அகாடமி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

அனைவருக்கும் கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பில் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

டைம்ஸ் குழு

மின்வெட்டை கண்டித்தும், துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தியும் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியின் முக தோற்றத்தை மாற்றியமைத்த கவுன்சிலர். குவியும் பாராட்டுக்கள்.

டைம்ஸ் குழு

Leave a Comment