May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா.

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா நேற்று(08/12/2024) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது. ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி முஹம்மது பாரூக் தலைமை தாங்கி, மினி மஹாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். துணை முத்தவல்லி ரவூப் வரவேற்புரை ஆற்றினார்.

விழாவிற்கு S.A. புகாரி மௌலானா, A. S. ஸதக்கத்துல்லாஹ் பாகவி, இமாம் அப்துல் வாஹித் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். விழாவில், மினி மஹால் கட்டுமான பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் கௌரவிக்கப்பட்டனர்.

ஜாமிஆ மஸ்ஜித் உறுப்பினர்கள் அபுதாஹீர் மற்றும் ஹாஜாத் அலி ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர். இறுதியில் ஜாமிஆ மஸ்ஜித் செயலாளர் பஷீர் அஹமது நன்றியுரை கூறி, துஆ ஓதப்பட்டு விழா நிறைவடைந்தது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டகுப்பத்தில் பட்டா மாற்ற சிறப்பு முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பேரூராட்சியின் நிர்வாகத்தை கண்டித்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

Leave a Comment