23.3 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் மையவாடி புனரமைப்பு.

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில் மையவாடி சீரமைக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கடந்த மூன்று மாதங்களாக சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

பள்ளிவாசல் குளத்தை தூர்வாரி, அதில் உள்ள மணல்களை மையவாடியில் தாழ்வான பகுதியில் சுமார் மூன்று அடிக்கு மேல் மணல் நிரப்பி, மட்டம் செய்யப்பட்டது.

அதன் பிறகு, மையவாடியில் புதிதாக நான்கு சாலைகள் அமைத்து, அதில் மூன்று சாலை மேற்கு பகுதியிலும், ஒரு சாலை நடுப்பகுதியிலும் அமைக்கப்பட்டது. சாலையின் நடுவே நடைபாதை கற்கள் பதிக்கப்பட்டு, இருபுறமும் வண்ணம் பூசப்பட்டுள்ளது.

முன்னதாக மையவாடியில் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் அடக்கம் செய்வதற்கு, பெரும் சிரமம் ஏற்பட்டு வந்த நிலையில், தற்பொழுது 38 எல்இடி(LED) விளக்குகள் உட்புற சாலைகளிலும், 8 எல்இடி(LED) விளக்குகள் வெளிப்புற மதில் சுவர்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மையத் அடக்கம் செய்வதற்கு அதிக திறன் கொண்ட ஒரு ஸ்டாண்ட் லைட்டும்(Stand Light) அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது புனரமைப்பு பணி முழுவதும் முடிந்த நிலையில், பராஅத் இரவான நேற்று(07/03/2023), ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் சொற்பொழிவு பயான் நடைபெற்றது. அதன் பிறகு ஜமாத்தார்கள் அனைவரும் மையவாடிக்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தல்: இன்றைய(02-02-2022) வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விவரம். சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!

டைம்ஸ் குழு

கத்தார் வாழ் கோட்டகுப்பத்தினர் ஹஜ் பெருநாள் சந்திப்பு (படங்கள்)

டைம்ஸ் குழு

ஹிஜாப் தடை: கோட்டக்குப்பதில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

Leave a Comment