22.3 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் நாளை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பு சிறப்பு முகாம்.

விழுப்புரம் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர், முதன்மை அரசு செயலாளர் அவர்களால் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் (அல்லது) ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதை கண்டறிவதற்கும் 01/08/2022 முதல் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்திடும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, நாளை(04/09/2022) ஞாயிற்றுக்கிழமை காலை 9. 30 மணி முதல் மாலை 5. 30 மணி வரை கோட்டக்குப்பம் நகராட்சியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு முகாமில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம் – 6பி பெற்று ஆதார் எண் அல்லது ஆதார் எண் இல்லையெனில் படிவத்தில் குறிப்பிட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை இணைத்து வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் இணைத்துக்கொள்ளலாம்.

இவ்வாய்ப்பினை வாக்காளர்கள் தவறாமல் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி சிறப்பு முகாம்கள், நவம்பா் 12,13, 26, 27 தேதிகளில் நடக்கிறது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம்(KIWS) சார்பாக பரிசளிப்பு நிகழ்ச்சி

கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய 27 வார்டு வரைவு பட்டியல் வெளியீடு (Exclusively only on KottakuppamTimes.com).

டைம்ஸ் குழு

Leave a Comment