நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள், இந்த அரிய வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் அரசு பணி தேர்வுகளுக்கான பயிற்சி முகாம் கோட்டகுப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் முன்னெடுப்பில் விரைவில் அமைக்கப்படவுள்ளது.
மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பயிற்றுவிக்கப்படவுள்ளது. இதற்கு மிகவும் குறைந்த கட்டணமாக ஒரு ஆண்டுக்கு ரூ.5,000/- பெறப்பட்டு, இந்த பயிற்சியில் முழுமையாக வருகை புரிந்து, சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பி தரப்படும். முதல் தவணையாக ரூ.2,500/ செலுத்தி தங்கள் சேர்க்கையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஆகவே, இந்த அரிய வாய்ப்பினை நமதூர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், காலதாமதமின்றி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பம் பெற (Application Form) கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அலுவலகத்தில் (காலை: 10:00 மணி முதல் முற்பகல் 12:30 வரை; மாலை 3:30 மணி முதல் 4:30 மணி வரை) விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்த படிவத்தை 31-07-2022 தேதிக்குள் பள்ளிவாசல் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் சந்தேகங்களுக்கு கிழே கொடுக்கப்பட்டுள்ள ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்,
- ஜனாப். A. முஹம்மது ஹாஜாத் அலி – 99443 42179
- ஜனாப். முஹம்மது ரஃபி – 86828 73120
- ஜனாப். M. I. லியாகத் அலி – 97902 01666
- ஜனாப். A. முஹம்மது யூனுஸ் – 83003 67068