23.3 C
கோட்டக்குப்பம்
December 15, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

உயிர் பலி வாங்க காத்திருக்கும் கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை சைடு வாய்க்கால்?

கோட்டக்குப்பம் டிச:20
கோட்டக்குப்பத்தில் பழைய பட்டினம் பாதையில் உள்ள சைடு வாய்க்கால்களை கோட்டகுப்பம் பேரூராட்சி சார்பில் தூர் வாருவதற்காக மேலே போடப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்புகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

சுத்தம் செய்யப்பட்ட வாய்க்கால்களை மீண்டும் மூடாமல் அப்படியே திறந்து விட்ட காரணத்தால் மீண்டும் அதன் முன் குப்பைகள் சேர்ந்து அடைப்புகள் ஏற்பட காரணமாக உள்ளது.

மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர், கீழே விழுந்து இதுவரை 10க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது.

உயிர்பலி ஏற்படும் முன் பேரூராட்சி நிர்வாகம் வாய்க்கால்களும் மேல் சிலாப்புகள் அமைத்து மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜிதுக்குட்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த குளம் சீரமைப்பு.

டைம்ஸ் குழு

இப்ராஹிம் கார்டன் பகுதியில் இனியாவது குப்பைகள் கொட்டுவது தவிர்க்கப்படுமா? கோட்டக்குப்பம் நகராட்சியின் அதிரடி நடவடிக்கை.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளின் ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தி..

Leave a Comment