22.3 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பர்கத் நகர் அங்கன்வாடி செயல்படாததால் மக்கள் அவதி..

கோட்டக்குப்பம் பர்கத் நகர் மூன்றாவது கிராஸ்ஸில் இயங்கும் குழந்தைகள் மையம் (அங்கன்வாடி) கட்டிடம் கடந்த 20 நாட்களாக மழை நீரால் சூழப்பட்டு கட்டிடத்தின் உள்ளே செல்ல முடியாமல் பூட்டி கிடக்கிறது.

அதில் பணிபுரியும் பொறுப்பாளர்களும் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால் அதன் உள்ளே சென்று பொதுமக்களுக்கு தேவையான தடுப்பூசி போடுதல், சத்துமாவு வழங்குதல் போன்ற பணிகள் நடைபெறாமல் தடைப்பட்டு இருக்கிறது.

பள்ளமான பகுதியாக இருப்பதால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மண் நிரப்பி தண்ணீர் தேங்காத வண்ணம் தடுக்க வேண்டும்.

தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்பதால் பால்வாடி முற்றிலும் செயல்படவில்லை.

மேலும் தண்ணீர் நிற்பதால் கொசுக்களும், விஷ ஜந்துக்களும் உலாவுகின்றன. ஆகவே அதை உடனடியாக பார்வையிட்டு மண் நிரப்பி தண்ணீர் தேங்காத வண்ணம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உள்ளூர் நிருவாகத்தை பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

புதுச்சேரியில் முகக்கவசம் அணிய ஆட்சியர் அறிவுறுத்தல்!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து செயல் அலுவலர் அவர்களின் காணொளி.

கோட்டக்குப்பம் மஹ்மூதியா மதரஸா: ஈத்கா வசூல் நன்றி அறிவிப்பு

Leave a Comment