May 10, 2025
Kottakuppam Times
பிற செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா; மொத்தம் 70,977 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று (ஜூன் 25) புதிய உச்சமாக ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70,977 ஆகவும், பலி எண்ணிக்கை 911 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 151 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 70,977 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 88 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 32,543 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 10,08,974 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

இன்று அரசு மருத்துவமனையில் 29 பேரும், தனியார் மருத்துவமனையில் 16 பேரும் என 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 39,999 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 30,064 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

மரக்காணம் அருகே கொன்று புதைக்கப்பட்ட மாணவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இதில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

தமிழகத்தில் மேலும் பல கட்டுப்பாடுகள் அறிவிப்பு. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. முழு விவரம்….

டைம்ஸ் குழு

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்

டைம்ஸ் குழு

Leave a Comment