22.3 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

அஞ்சுமன் நூற்றாண்டு ஆரம்ப விழா, பதிப்பகத் தொடக்க விழா மற்றும் வலைத்தள திறப்பு விழா நடைபெற்றது.

சின்ன கோட்டக்குப்பம் பிரின்ஸ் பார்க்கில் நேற்று(04/02/2025) மாலை 7 மணியளவில், அஞ்சுமன் நூற்றாண்டு விழா, பதிப்பகத் தொடக்க விழா மற்றும் வலைத்தள திறப்பு விழா ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகள் ஒரே மேடையில் சிறப்பாக நடைபெற்றன.

பேராசிரியர் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அஞ்சுமன் தலைவர் டாக்டர் எல்.எம். ஷரிஃப் முன்னிலை வகித்தார். இறைமறை வசனம் ரிதா மற்றும் இக்ரா ஆகியோரால் ஓதப்பட்டது. வரவேற்புரையை அபுதாஹிர் நிகழ்த்தினார். அஞ்சுமன் நூற்றாண்டு நூலகத்தை பிலால் முஹம்மது மற்றும் பேராசிரியர் முரளி அரூபன் ஆகியோர் அறிமுகப்படுத்தி, நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்தனர்.

அஞ்சுமன் வலைதளத்தை முஹம்மது இலியாஸ் திறந்து வைத்தார். ஸ்ரீதர் சுப்ரமணியம் வாழ்த்துரை வழங்கினார். ஹாஜாத் அலி வலைதளத்தைப் பற்றி விரிவாகப் பேசினார்.

அஞ்சுமன் பதிப்பகத் தொடக்க விழாவை நகராட்சி தலைவர் எஸ்.எஸ். ஜெயமூர்த்தி திறந்து வைத்தார். முனைவர் நா இளங்கோ பதிப்பகம் மற்றும் அதன் முதல் நூலை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றினார். கோட்டை கலீம் எழுதிய “மெய்மொழி” கவிதை நூல் வெளியிடப்பட்டது. பேராசிரியர் கவிஞர் ஜெ. ஹாஜாகனி வெளியீட்டுச் சிறப்புரை வழங்கினார். பேராசிரியர் முனைவர் பா. சிவகுமார் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார்.

முஹம்மது அனஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். லியாகத் அலி கலிமுல்லா நன்றியுரை வழங்கினார். அஞ்சுமன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பெண்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது[புகைப்படங்கள்]

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன்: குப்பைகளுடன் ஒரு போராட்டம்.

டைம்ஸ் குழு

அனைவருக்கும் ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Leave a Comment