கோட்டக்குப்பம் பகுதியில் நீண்ட காலமாக தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. துணை மின் நிலையம் அமைத்து உடனடியாக தொடர் மின்வெட்டை சரி செய்ய வேண்டி பல ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்பு, போராட்டங்கள், மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த மாற்றமும் இல்லாமல் நாளொன்றுக்கு பல மணி நேரம் தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டான்ஜெட்கோ நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ் ஆகிய இருவரையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா முன்னிலையில் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள் நேற்று(13/08/2024) சந்தித்து கோட்டக்குப்பத்தில் நிலவிவரம் தொடர் மின்வெட்டைக் குறித்தும், மின்வெட்டால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அன்றாடம் படும் இன்னல்களை பற்றியும் எடுத்துரைத்தனர். இதையெடுத்து, இதற்கான சரியான தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர்.
இந்நிகழ்வில், கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் A. அன்சர் பாஷா, செயலாளர் முஹம்மது வக்கீல், பொருளாளர் கமால் ஹசேன், துணைத் தலைவர் A. முஹம்மது இலியாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.