இந்திய திருநாட்டின் 75-வது குடியரசு தினம் இன்று(26/01/2024) வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி தலைவர் ஓ. அஷ்ரப் அலி மற்றும் செயலாளர் A. முஹம்மது இலியாஸ் அவர்கள் முன்னிலையில் தேசியக் கொடி ஏற்றினார்.
ரப்பானிய்யா அரபிக் கல்லூரி துணைத்தலைவர் S. பிலால் முஹம்மத், மௌலவி முஹம்மது யஹ்யா ரப்பானி, செயலாளர்கள் – A. அமீர் பாஷா, SMJ அமீன், பொருளாளர் – ரஹ்மத்துல்லாஹ் எம் சி, செயற்குழு உறுப்பினர்கள் V. R. முஹமது இப்ராஹிம், ஹாஜி A. இஹ்சானுல்லாஹ், அப்துல் குத்தூஸ், B. முஹமது பாரூக், முன்சி உபைதூர் ரஹ்மான், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.
இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.