May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா: கோட்டக்குப்பம் 20-வது வார்டு அங்கன்வாடியில் நலத்திட்ட உதவிகள்.

கோட்டக்குப்பம் நகராட்சி 20-வது வார்டு திமுக கிளை கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்த நாள் விழா ரஹ்மத் நகர் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு முன் பருவ பள்ளி கல்வி உபகரணங்கள், அங்கன்வாடி மையத்திற்கு மின் விசிறி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியை, 20-வது வார்டு கிளை செயலாளர் மீடியா சாதிக் பாஷா ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோட்டக்குப்பம் நகராட்சி நகர மன்ற தலைவர் எஸ். எஸ். ஜெயமூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு மின் விசிறி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

மேலும், நிகழ்ச்சியில் நகர மன்ற துணை தலைவர் ஜீனத் பீ முபாரக், நகர அவை தலைவர் & நகர மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஜாகீர் உசேன், நகர துணை செயலாளர் பாபு (எ) பக்ருதீன் , நகரமன்ற உறுப்பினர்கள், கலா மணிகண்டன், வீரப்பன், சண்முகம், ஸ்டாலின் சுகுமார், ஜெயஸ்ரீ சுகுமார், சம்சாத் பேகம் சாதிக் பாஷா, கிளை கழக செயலாளர்கள் – மூர்த்தி, செல்வம், முருகவேல் , முகமது அலி, கமால்ஹாசன், அறிவழகன், மற்றும் வசந்த் , பிரேம், முகமது பாரீஸ், நிவாஸ், ஜாகிர் உசேன், அங்கன்வாடி மையம் பொறுப்பாளர் ராஜேஸ்வரி, பணியாளர் சுமதி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

ஜாமிஆ மஸ்ஜித் 150-வது ஆண்டு முப்பெரும் விழா பகுதி – 3

TNTJ கோட்டக்குப்பம் கிளை சார்பாக காவல்துறை ஆய்வாளருக்கு பொதுநலன் கடிதம் வழங்கப்பட்டது

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் உள்ளாட்சி தேர்தல்: 145 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

டைம்ஸ் குழு

Leave a Comment