கோட்டக்குப்பதில் இன்று 05.01.2022, மாலை 5:00 மணிக்கு, மனோன்மணி திருமண மண்டபத்தில் கோட்டக்குப்பம காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்கள் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ECR ரோட்டில் அமைந்துள்ள கடற்கரை கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களிடம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை குறித்து காவல் ஆய்வாளர் எடுத்துரைத்தார்.
- அனைவரும் முககவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.
- பொது இடங்களில் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.
- பொது இடங்களில் முககவசம் அணியாதவர்கள் அபராதம் செலுத்த வேண்டும்.
- வழிபாட்டு தலங்களில் அனுமதியில்லாத நாட்களில் வழிபாடு நடத்த கூடாது.
- தற்போது கால்நடைகளால் சாலைகளில் விபத்து ஏற்பட்டு வருகிறது. கால்நடைகளை வளர்ப்பவர்கள் அவர்களுடைய கால்நடைகள் சாலைகளில் திரிய அனுமதிக்க கூடாது. மேலும், சாலைகளில் கால்நடைகளை விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழக அரசு லாக்டவுண் அறிவிப்பை மீறாமல் கடைபிடிக்க வேண்டும்.
- வாகனங்களில் வருபவர்கள் ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.
என்று காவல் ஆய்வாளர் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.