May 10, 2025
Kottakuppam Times
Uncategorized

கோட்டக்குப்பதில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

கோட்டக்குப்பத்தில், மனிதநேய ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பில், இன்று மாலை 4:30 மணி அளவில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, கோட்டக்குப்பம் நகர ஆட்டோ தொழிற்சங்கச் செயலாளர் முகமது அலி, தலைமையில் நடைபெற்றது.

தமுமுக மமக நகர தலைவர் த.ஜரித் முன்னிலை வகித்தார்.
இதில், மமக மாவட்ட துணை செயலாளர் அ.அஷ்ரப் அலி, தமுமுக மாவட்ட துணை செயலாளர் ஜாமியாலம் ராவுத்தர், மண்டல ஊடக அணி செயலாளர் க.அஸ்கர் அலி, வானூர் ஒன்றிய தலைவர் ஹபீப் முஹம்மத், தமுமுக ஒன்றிய செயலாளர் அபுதாஹிர், வி.சி.க நகர அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர் சங்கம் தலைவர் இரா.சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மாவட்ட இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை IPP மாவட்ட செயலாளர் தொண்டி O.K.S.நசிர் அலி, மாவட்ட மருத்துவ சேவை அணி பொருளாளர் Gold பாபு(எ) j.ஷேக் காதர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட ஊரக ஊடக அணி செயலாளர் அமீர் அப்பாஸ், தமுமுக மமக கோட்டக்குப்பம் நகர ஜகத் நகர் கிளை மமக தலைவர் அன்சாரி கிளை செயலாளர் இக்பால் பாஷா, ரஹ்மத் நகர் கிளை செயலாளர் நஜிர் அகமத் நிர்வாகிகள், மற்றும் MTS ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஒன்றிய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

தகவல்: க.அஸ்கர் அலி

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் கொரோனா போர் வீரர் விருது (Corona Warrior Award 2020-21)

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

வானூர் தொகுதியில் களம் காணும் 7 வேட்பாளர்கள்.

டைம்ஸ் குழு

Leave a Comment