May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளையொட்டி: கோட்டக்குப்பதில் 300-க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு இலவச காய்கறிகள் வினியோகம்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் கோட்டகுப்பம் பேரூராட்சி திமுக கழகத்தின் இஸ்லாமிய பகுதியின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாளையொட்டி 300-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் இலவச காய்கறி பாக்கெட்டுக்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் விழுப்புரம் மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஜெயமூர்த்தி அவர்கள் முன்னிலையில், மாவட்ட பிரதி நிதி பஷீர், ஸ்டார் பாபு என்கிற பகுருதீன், A.R. சாதிக் பாஷா, சாகுல் அமீது, கமால் ஹசேன், வதூத் ரஹ்மான், முஹம்மத் வக்கீல், முகமது உசேன் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை மீனவர் அணி அமைப்பாளர் சுப்பிரமணி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜாகிர் உசேன், 11-வது வார்டு கிளை செயலாளர் இஸ்மாயில், 8-வது வார்டு கிளை செயலாளர் பாபு, கோட்டக்குப்பம் இளைஞர் அணி துணை அமைப்பாளர் மன்சூர், 15-வது வார்டு கிளை அமைப்பாளர் பஷீர், ஜமியத் நகர் திமுக பிரமுகர் ஹஜ், ஜாகிர் ஹுசேன் போன்ற அனைத்து கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவடைந்தது.

டைம்ஸ் குழு

கோட்டகுப்பம் பாரம்பரிய கண்காட்சி வீடியோ தொகுப்பு-1

Leave a Comment