May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பதில் 2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது..

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதனை முன்னிட்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

அந்த வகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதம் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் பணியினை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியது. கடந்த மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 2ஆவது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் இன்று (டிச.12) மற்றும் நாளை (டிச.13) என 2 நாட்கள் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களில், 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். திருத்தவோ, நீக்கவோ வேண்டுமெனில், அதற்காக தனியாக விண்ணப்பிக்கலாம்.

பொது மக்கள், அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேரில் சென்று வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா? என்று சரிபார்த்துக் கொள்ளலாம். வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது பெயரை சேர்க்கவோ, திருத்தம் செய்யவோ விண்ணப்பிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இரண்டு இடங்களில் பெயர் இடம் பெற்றிருந்தால் அவற்றை நீக்கவும், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் பெயர்களை நீக்கும் பணிகளும் இந்த சிறப்பு முகாமில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்புபவர்கள், முகவரி சான்று, வயது சான்று, அடையாள சான்று ஆகியவற்றை சமர்பித்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைக்கான போட்டி தேர்வு பயிற்சிக்கு நேர்காணல். இளைஞர்களே, வாய்ப்பினை தவறவிடாதீர்கள்!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் உள்ள அங்கன்வாடி பெயர் பலகை எரிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் சங்கத்தில் சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது.

டைம்ஸ் குழு

Leave a Comment