28.7 C
கோட்டக்குப்பம்
May 11, 2025
Kottakuppam Times
செய்திகள் புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரியில் கனமழையால் தெருக்களில் வெள்ளம்: முதல்வர் ஆய்வு

புதுச்சேரியில் இரண்டு நாள்களாக பெய்த கனமழையால் புதுச்சேரி நகர வீதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அதை வெளியேற்றும் பணிகளை முதல்வர் வே.நாராயணசாமி வெள்ளிக்கிழமை காலை ஆய்வு செய்தார்.

கடந்த இரண்டு நாள்களாக புதுவை மாநிலம் முழுவதும் தொடர் அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருப்பதால் முதல்வர் நாராயணசாமி வெள்ளிக்கிழமை காலை நெல்லித்தோப்பு தொகுதி அண்ணா நகர் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு செய்தார்.

காமராஜர் தொகுதி ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீரில் நடந்து சென்று பார்வையிட்டவர், அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்னும் கூடுதலாக மின்மோட்டார் மூலம் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் படி உத்தரவிட்டார். ஏற்கனவே ஒரு சில பகுதிகளில் மின் மோட்டார் மூலம் பணிகள் நடப்பதையும் பார்வையிட்டார். 

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 124 மி.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வரின் ஆய்வின் போது காமராஜர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜான் குமார், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

சமரசம் நகர் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி…

கோட்டக்குப்பம் அல்-ஜாமியதுர் ரப்பானியா அரபி கல்லூரியில் தேசிய கொடி ஏற்றம்!

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பாரம்பரிய 150-ம் ஆண்டு விழா தொகுப்பு – 2

Leave a Comment