May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

சின்ன கோட்டகுப்பத்தில் கொரோனா தொற்று..

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான, சின்ன கோட்டகுப்பத்தில் இன்று ஒரு புதிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் புதுச்சேரி மார்க்கெட்டில் வேலை புரிபவர் என தெரியவந்துள்ளது. ஆதலால் கோட்டகுப்பம் பேரூராட்சி உட்பட்ட பகுதியில் கொரோனா தொற்று எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று கண்டறியப்பட்ட பகுதிகள்,

* 6-வது வார்டு – 4

* கோட்டக்குப்பம் – 1

* சின்ன கோட்டக்குப்பம் – 1

* இந்திரா நகர் – 3 (முத்தியால்பேட்டை பகுதியைச் சார்ந்தவர்கள், தற்போது இந்திரா நகரில் வசிக்கின்றனர்).

அரசு அறிவித்த வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கடைபிடிக்காமல் அலட்சியம் செய்வதால்தான் கொரானா தொற்று பரவி வருகிறது. கடந்த 80 நாட்களாக எந்த விதமான தொற்றும் காணப்படாத நிலையில், தற்பொழுது நமதூர் பகுதியிலும் சில தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நம்முடைய அலட்சியத்தால் ஏற்பட்டது.

இந்தத் தொற்று மேலும் பரவாமல் இருக்க அரசு வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றுவோம். இந்த தொற்றுலிருந்து இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வோம்.

“கோட்டக்குப்பம் டைம்ஸ்” தினந்தோறும் கொரோனா எண்ணிக்கை பதிவிடுவதின் நோக்கம், நமதூர் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டியும், கொரோனா தொற்று பாதித்த பகுதிகளுக்கு செல்லாமல் இருக்கவும், மேலும் அரசு சொல்லும் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு. மாறாக யாரையும் இது பயமுறுத்த அல்ல.

கோட்டக்குப்பம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்யவும் – https://play.google.com/store/apps/details?id=com.kottakuppamtimes.news

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் இன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: நமதூர் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று தினங்களாக கொட்டித் தீர்க்கும் மழை.

கோட்டக்குப்பம் முத்தியால்பேட்டை எல்லைகள் மதியம் 2 மணிக்கு மேல் அடைப்பு.

Leave a Comment