22.3 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.

26.6.2020., வெள்ளிக்கிழமை
கோட்டக்குப்பத்தில் “சர்வதேச போதை பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி” கோட்டக்குப்பம் உட்கோட்ட காவல்துறை மற்றும் கோட்டக்குப்பம் கியூஸ் ஆம்புலன்ஸ் சேவை சங்கம் சார்பில் கோட்டக்குப்பம் காயிதே மில்லத் ஆர்ச் அருகில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சரவணன் அவர்கள் கலந்துகொண்டு தலைமை தாங்கி போதைப் பொருட்கள் வைத்திருத்தல் கடத்தல் போன்ற சட்ட திட்டங்களை குறித்து விளக்கம் அளித்தார். கியூஸ் சங்க தலைவர் முகமது இலியாஸ் அவர்கள் போதை பழக்கத்தினால் ஏற்படும் குடும்ப மற்றும் சமுதாயப் பிரச்சினைகள் குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் திரு.ராமலிங்கம் ,சமூக சேவர்கள் அப்துல் ரஷீத், பயாஸ் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு கியூஸ் ஆம்புலன்ஸ் சங்க நிர்வாகிகள் பாருக்,காதர்,ஷேக், சாதிக், யாசின் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

சமரசம் நகர் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி…

நகராட்சி ஆணையருடன் மமக நிர்வாகிகள் சந்திப்பு

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் மின்வாரியத்தில் மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்.

டைம்ஸ் குழு

Leave a Comment