23.7 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் இரவு 8 மணிவரை கடைகள் நடத்த ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை.

விழுப்புரம் மாவட்டம் வியாபாரிகள் சங்கம் தீர்மானத்தின்படி, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடைகளை 4 மணிக்கெல்லாம் அடைக்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்கம் தீர்மானித்து இருந்தனர். அதன்படி நேற்று முதல் கோட்டக்குப்பத்தில் கடைகளை 4 மணிக்கெல்லாம் அடக்க வேண்டும் என்று காவல் துறையினரும் மற்றும் பேரூராட்சி அதிகாரிகளும், கோட்டகுப்பம் பகுதியில் நேற்று மாலை ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.

இந்நிலையில் இன்று கோட்டக்குப்பத்தில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, எங்களுக்கு 4 மணிக்கு மேல் தான் அதிகப்படியாக வியாபாரம் நடக்கும், ஆகையால் எங்களுக்கு 8 மணி வரை பார்சல் மூலமாக வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று செயல் அலுவலரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இது சம்பந்தமாக மேலதிகாரிகளிடம் பேசி நாளைய தினம் உங்களுக்கு பதிலளிப்பதாக கூறியதை ஓட்டல் உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் 17-வது வார்டில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் கடற்கரை பகுதிகளில் ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோட்டக்குப்பம் காவல் உள்கோட்டத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு 4 நாள்களில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 600-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் குழு

Leave a Comment